UPDATED : நவ 18, 2026 07:57 PM
ADDED : நவ 18, 2026 07:56 PM
பந்தலுார்: ‘பந்தலுார் அருகே நாயக்கன் சோலை கிராம சாலையை சீரமைக்க வேண்டும்,’ என,வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, சமூக ஆர்வலர் தியாகராஜி மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய மனு; நாயக்கன்சோலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிக்கு முக்கிய போக்குவரத்து பயன்படும், 3 கி.மீ., சாலை கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. தற்போது, மிகவும் சேதமடைந்து, வாகனங்களும் செல்ல முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் இரண்டு பக்கமும் தனியாருக்கு சொந்தமான வனப்பகுதி அமைந்துள்ள நிலையில், பகல் நேரங்களிலும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இந்த வழியாக செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
