தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நிழற்குடை வேண்டும்

நிழற்குடை வேண்டும்

நிழற்குடை வேண்டும்


UPDATED : நவ 16, 2026 08:04 PM

ADDED : நவ 16, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 08:04 PM ADDED : நவ 16, 2026 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ‘ஊட்டி தலைகுந்தா பகுதியில் பயணியர் நிழற் குடைஅமைக்க வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி அருகே உள்ள தலைகுந்தா பகுதி, தமிழகம், கர்நாடகா, கேரளம் மாநிலங்களின் சந்திப்பு பகுதியாக உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்கு வாகனங்கள் நிற்கும் பகுதியில் நிழற்குடை இல்லாததால், மழை, வெயில் நாட்களில் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இது குறித்து பல முறை மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இப்பகுதியில் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us