sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கூடலூர் தலைவர் பதவிக்கு நான்கு முனைப்போட்டி

/

கூடலூர் தலைவர் பதவிக்கு நான்கு முனைப்போட்டி

கூடலூர் தலைவர் பதவிக்கு நான்கு முனைப்போட்டி

கூடலூர் தலைவர் பதவிக்கு நான்கு முனைப்போட்டி


ADDED : அக் 08, 2011 12:32 AM

Google News

ADDED : அக் 08, 2011 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர் : கூடலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு ஆதிவாசி பெண்கள் இடையே நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.கூடலூர் நகராட்சியில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் நகராட்சி தலைவர் பதவி எஸ்.சி., பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டது.

தற்போது நடக்கும் தேர்தலில் கூடலூர் நகராட்சி தலைவர் பதவி எஸ்.டி., (பழங்குடியினர்) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு 17 வது வார்டு கவுன்சிலர் சந்திரிகா (தி.மு.க,), ரமா(அ.தி. மு.க.,), லட்சுமி(காங்.,), ஜோதிசித்ரா(தே.மு. தி.க.,), சுயேச்சையாக பொம்மி ஆகிய ஆதிவாசி பெண்கள் களத்தில் உள்ளனர்.ஆளும் கட்சியான அ.தி.மு.க., முதல் முறையாக கூடலூர் நகராட்சி தலைவர் பதவியை கைபற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குடன் கூட்டணி அமைத்து களம் இறங்கியுள்ளது. கூடலூர் நகராட்சியை தக்க வைத்து கொள்ள தி.மு.க.,வும்; முக்கிய கட்சிகள் தனித்து நிற்பதால் 2001 போன்று காங்., மீண்டும் தலைவர் பதவியை கைபற்றுவோம் என்ற நம்பிகையுடனும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. வெற்றி எங்களுக்கு தான் என இளைஞர்கள் பலத்துடன் களம் இறங்கியுள்ள தே.மு.தி.க.வும், முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நகராட்சி தலைவர் பதவியை போன்று துணை தலைவர் பதவியையும் கைப்பற்ற இப்போதே அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றனர். இதனால், தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள் ளது.இதுவரை இல்லாத அளவில், இப்பகுதியின் மண்ணின் மைந்தர்களான 4 ஆதிவாசிகள் தலைமை பதவிக்கு போட்டியி டுவது பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள் ளது.








      Dinamalar
      Follow us