தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ‘நோட்டீஸ்’

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ‘நோட்டீஸ்’

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ‘நோட்டீஸ்’


UPDATED : அக் 25, 2026 08:20 PM

ADDED : அக் 25, 2026 08:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 08:20 PM ADDED : அக் 25, 2026 08:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்:

கூடலுார் தேசிய நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை, 28ம் தேதிக்குள் அகற்ற ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டது.

கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், டி.ஆர்., பஜார் முதல் தொரப்பள்ளி வரை, 28 கி.மீ., தூரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த, சாலை பாதுகாப்பு கூட்டத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர், சாலையோர ஆக்கிரமிப்புகளை, 28-ம் தேதிக்குள் அகற்ற வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, ‘மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த சாலை பாதுகாப்பு கூட்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தப்பட்டது. நீதிமன்றமும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலையோரங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை, 28ம் தேதிக்குள் தாங்களாகவே அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில், 28ம் தேதிக்கு பின், அரசு துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்படும் செலவினங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us