/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சத்துணவு ஊழியர்களுக்கு பணி உயர்வு வேண்டும்
/
சத்துணவு ஊழியர்களுக்கு பணி உயர்வு வேண்டும்
ADDED : டிச 12, 2024 09:49 PM
ஊட்டி; 'சத்துணவு ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பணி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும்,' என, கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்க ஊட்டி வட்டக்கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊட்டி வட்டக்கிளை தலைவர் சுகுணா தலைமை வகித்தார். செயலாளர் மேரி ஹில்டா, பொருளாளர் கீதா மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில்,'தொகுப்பூதியம் அடிப்படையில், 3,000 ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு பணியாளர்கள் நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்; காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடத்திட வேண்டும்; கால முறை ஊதியம் வழங்க வேண்டும்; சத்துணவு கூடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; சத்துணவு ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பணி உயர்வு உடனடியாக அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரம்யா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

