sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆக்கிரமிக்கப்படும் சாலைகள்; மவுனமாகும் அதிகாரிகள்

/

ஆக்கிரமிக்கப்படும் சாலைகள்; மவுனமாகும் அதிகாரிகள்

ஆக்கிரமிக்கப்படும் சாலைகள்; மவுனமாகும் அதிகாரிகள்

ஆக்கிரமிக்கப்படும் சாலைகள்; மவுனமாகும் அதிகாரிகள்


ADDED : பிப் 20, 2024 10:40 PM

Google News

ADDED : பிப் 20, 2024 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:கூடலுாரில் இருந்து பந்தலுார் மற்றும் நெலாக்கோட்டை வழியாக கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கோழிக்கோடு செல்லும் நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன.

அதில், பஜார் பகுதி சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் மற்றும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு வளரும் கையகப்படுத்தி உள்ளனர்.

இதனால், பஜார் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தவும் இடம் இல்லாமல், வாகனங்கள் வந்து செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 'பஜார் பகுதிகளில் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும்,' என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு, பலமுறை வலியுறுத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், உப்பட்டி பஜாரிலிருந்து, அத்திக்குன்னா செல்லும் சாலையில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நிலத்தை, அப்போதைய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீட்டனர். மீட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறை கற்கள் பதிக்காமல் விடப்பட்டதால், தற்போது இந்த பகுதியில் உள்ள பலரும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி ஆக்கிரமித்து வருகின்றனர்.

இதனால், மீட்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை நிலம், மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளுக்கு சென்றுள்ளது.

மக்கள் கூறுகையில், ' உப்படடியில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலங்களை மீட்டு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'

அதிகாரிகள் கூறுகையில்,'அப்பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us