/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி தாவரவியல் பூங்கா பொலிவூட்ட நடவடிக்கை
/
ஊட்டி தாவரவியல் பூங்கா பொலிவூட்ட நடவடிக்கை
ADDED : செப் 25, 2024 12:35 AM

சென்னை : ஊட்டி தாவரவியல் பூங்காவை தற்போதைய நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி பொலிவூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறைக்கு சென்னை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், தென்காசி, திருவண்ணாமலை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய எட்டு மாவட்டங்களில், 23 பூங்காக்கள் உள்ளன. இவை பொதுமக்கள் பொழுதுபோக்கு மையமாக திகழ்வதுடன், தாவரவியல் படிக்கும் மாணவர்களின் பயிற்சி களமாகவும் உள்ளன.
இதில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, 1848 ம்ஆண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இது மொத்தம் 54,340 ஏக்கர் பரப்பரளவு கொண்டது.இந்த பூங்காவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள், அரியவகை தாவரங்கள், மூலிகை செடிகள், பூச்செடிகள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு கோடை விழாவை கண்டுகளிப்பதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்றனர். பூங்கா அமைக்கப்பட்டு 175 ஆண்டுகள் கடந்தும், இதுவரை பூங்காவை முழுமையாக பொலிவூட்டும் பணிகள் நடக்கவில்லை. இதற்கு நிதியும் ஒதுக்கவில்லை. பராமரிப்பு பணிகள் மட்டுமே அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பூங்கா, தற்போதைய நவீன தொழிற்நுட்ப வசதிகளை பயன்படுத்தி பொலிவூட்டப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, பூங்காவை பொலிவூட்டும் பணிகள் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, நடைபாதை, கழிவறைகள், பார்வையாளர் இருக்கை உள்ளிட்ட வசதிகளும், டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் பல வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது. அடுத்தாண்டு மே மாதம் கோடை விழாவிற்கு முன்பாக, இப்பணிகளை முடிக்க தோட்டக்கலைத்துறை திட்டமிட்டு உள்ளது.