ADDED : செப் 07, 2025 09:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;ஊட்டி பூண்டு விலை வீழ்ச்சி ஏற்பட்டு, கிலோவிற்கு,145 ரூபாய் வரை கிடைத்தது.
நீலகிரி மாவட்டத்தில், விளைவிக்கும் பூண்டு, மேட்டுப்பாளையம் ஏல மையத்தில், வாரந்தோறும் ஞாயிறன்று ஏலம் விடப்படுகிறது. மேட்டுப்பாளையம் ஏல மையத்தில் நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ, 140 ரூபாய்க்கு ஏலம் போனது.
இதே போல, குன்னுார் எடப்பள்ளியில், புதிதாக துவங்கப்பட்ட ஒழுங்குமுறை ஏல சந்தையில் கடந்த, 4ம் தேதி நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக கிலோவுக்கு, 145 ரூபாய் கிடைத்தது.
கடந்த மாத துவக்கத்தில், 210 ரூபாய் வரை அதிகபட்ச விலை கிடைத்த நிலையில், தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.