ADDED : மார் 09, 2024 07:22 AM

ஊட்டி: ஊட்டி கார்டன் சாலையில் 'ஹெல்ப் டெஸ்க்' நேற்று திறக்கப்பட்டது.
ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், 125 ஆண்டு பாரம்பரியமிக்க அசெம்பிளி தியேட்டர் அமைந்துள்ளது. தியேட்டர் முகப்பு பகுதியில், மாவட்ட போலீசார் 'ஹெல்ப் டெஸ்க்' அமைக்க முடிவு செய்து பணிகள் துவங்கின.
இதனால், 'பாரம்பரிய கட்டடத்தின் பொலிவு பாதிக்கப்படும்' என, எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அதே பகுதியில், வேறு இடத்திற்கு, 'ஹெல்ப் டெஸ்க்' மாற்றப்பட்டது. இந்நிலையில் பணி நிறைவடைந்து, நேற்று திறக்கப்பட்டது.
நீலகிரி எஸ். பி., சுந்தரவடிவேலு ஹெல்ப் டெஸ்க்கை திறந்து வைத்து கூறுகையில், ''ஊட்டிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக, தாவரவியல் பூங்காவுக்கு வருகை தரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, ஹெல்ப் டெஸ்க் திறக்கப்பட்டுள்ளது. போலீசார் இங்கு, பணியமர்த்தப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்,''என்றார்.

