/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பாலக்காடு மாரத்தான்' ஜன., 11ல் நடக்கிறது
/
'பாலக்காடு மாரத்தான்' ஜன., 11ல் நடக்கிறது
ADDED : டிச 29, 2025 06:22 AM
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காட்டில் 'போர்ட் ரன்னர்ஸ் கிளப்' சார்பில் 'பாலக்காடு மாரத்தான்' போட்டி, வரும் ஜன., 11ம் தேதி நடக்கிறது.
இதில், 21.1 கி.மீ., 'ஹாப் மாரத்தான்', 10 கி.மீ., 'பேமிலி பன்' மாரத்தான் 5 கி.மீ., ஓட்டமும் நடக்கிறது. மலம்புழா நீர்ப்பிடிப்பு பகுதிக்கு சுற்றிலும் உள்ள பாதையில் நடக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
இதில் கலந்து கொள்ள, www.palakkadmarathon.com வாயிலாக பதிவு செய்யலாம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, போர்ட் ரன்னர்ஸ் கிளப் தலைவர் அஜய், செயலாளர் ரவிகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

