நிழல்குடையில் காணப்படும் சாணத்தால் பயணிகள் பாதிப்பு
நிழல்குடையில் காணப்படும் சாணத்தால் பயணிகள் பாதிப்பு
ADDED : ஆக 23, 2025 03:00 AM

அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்டில் நகராட்சிக்கு சொந்தமான பயணியர் நிழல் குடை இரவில் கால்நடைகள் தஞ்சமடையும் பகுதியாக மாறிவிடுகிறது.
இதனால், பகல் நேரத்தில் சாணத்தின் நாற்றத்தில் பயணிகள் அமர முடியாமல், மழையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில்,' ஊட்டியின் உள்ள, ஏ.டி.சி. நிழல் குடையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். நிழல் குடைக்குள் உள்ள சாணத்தை மூன்று நாட்களாக நகராட்சி நிர்வாகம் அகற்றாமல் உள்ளனர்.
பொதுமக்கள் மழை, வெயிலில் வெளியே நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட் டுள்ளது. எனவே, இப்பகுதியில் நாள்தோறும் துாய்மைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
