/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மீண்டும் மீண்டும் பழுதாகும் மின் கேபிள் ஒயர்: மக்கள் அதிருப்தி
/
மீண்டும் மீண்டும் பழுதாகும் மின் கேபிள் ஒயர்: மக்கள் அதிருப்தி
மீண்டும் மீண்டும் பழுதாகும் மின் கேபிள் ஒயர்: மக்கள் அதிருப்தி
மீண்டும் மீண்டும் பழுதாகும் மின் கேபிள் ஒயர்: மக்கள் அதிருப்தி
ADDED : அக் 29, 2025 11:37 PM

கூடலூர்: கூடலூர், முதுமலை தொரப்பள்ளி - தெப்பக்காடு இடையே, முதல்வர் துவக்கி வைத்த கேபிள் ஒயர்(வான் வழி தொகுப்பு கம்பி) திட்டத்தில் அடிக்கடி மின் சப்ளை துண்டிக்கப்படுவதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம், அபயாரண்யம், கார்குடி, தெப்பகாடு குடியிருப்புகளுக்கு மின் கம்பிகள் வனப்பகுதி வழியாகவே செல்கிறது. பருவமழை மற்றும் காற்றின் போது மரக்கிளைகள், மரங்கள் மின் கம்பிகளின் மீது விழுந்து சேதமடைந்து மின் சப்ளை பாதிக்கப்பட்டது.
இதற்கு தீர்வு காணும் வகையில் தொரப்பள்ளி -- தெப்பக்காடு இடையே வனப்பகுதி வழியாக 11 கி.மீ., செல்லும் மின் கம்பிகளுக்கு மாற்றாக, 5 கோடி ரூபாய் மதிப்பில் கேபிள் ஒயர்(வான் வழி தொகுப்பு கம்பி) அமைக்கப்பட்டது. இத்திட்டத்தை மே 13ல் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத் திட்டம் துவங்கிய சில நாட்கள் மட்டுமே இதன் வழியாக மின் சப்ளை வழங்கினர். தொடர்ந்து பழுதடைந்து, மின் சப்ளை பாதிக்கபட்டது. இதனால்,மீண்டும் மின்கம்பி வழியாக மின் சப்ளை செய்தனர். மழையின் போது, மரங்கள், மரக்கிளைகள் விழுந்து அடிக்கடி மின் சப்ளை பாதிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனிடையே பழுதடைந்த, கேபிள் ஒயர்சீரமைக்கப்பட்டு, அதன் வழியாக சில வாரங்களுக்கு முன் மீண்டும் மின் சப்ளை வழங்கினர்.
இரண்டு வாரங்களுக்கு முன், மீண்டும் கேபிள் ஒயர்பழுதடைந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. மீண்டும் மின் கம்பி வழியாக மின் சப்ளை செய்து வருகின்றனர். இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பழங்குடி மக்கள் கூறுகையில், 'தடையின்றி மின்சாரம் வழங்க, அமைக்கப்பட்ட கேபிள் ஒயர்அடிக்கடி பழுதாகி பயனில்லாமல் உள்ளது. எனவே, இதனை சீரமைத்து, தடையின்றி மின் சப்ளை வழங்க வேண்டும்' என்றனர்.
மின்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பழுதடைந்த மின் கேபிள் வயரை சீரமைத்து, மின்சப்ளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர். திட்டத்தை மேற்கொண்ட நிறுவனம், மூன்றாண்டுகள் தொடர்ந்து பராமரிப்பு பணிகளும் மேற்கொள்வார்கள்' என, கூறினர்.

