பாதையில் விழுந்த வேங்கை மரம் :மக்கள் நடந்து செல்ல சிரமம்
பாதையில் விழுந்த வேங்கை மரம் :மக்கள் நடந்து செல்ல சிரமம்
UPDATED : அக் 27, 2026 09:58 PM
ADDED : அக் 27, 2026 07:06 PM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் புதுக்காடு கிராமத்தில் நடைபாதையில் விழுந்த வேங்கை மரம் அகற்றப்படாமல் உள்ளதால், மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர் .
குன்னுார் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள, புதுக்காடு கிராமத்தில் கடந்த, 22ம் தேதி ராட்சத மரம் விழுந்ததை அடுத்து, 23-ஆம் தேதி, 3 மணி நேரம் போராடி வெட்டி அகற்றப்பட்டது. அங்குள்ள தாழ்வான நடைபாதையில் மர துண்டுகள் விழுந்து கிடப்பதால் அதனை அகற்றுவதில் சிரமம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மலையின் சரிவில் குறுக்கு மண் வழித்தடத்தில் நடந்து செல்லும் அவல நிலைக்கு பழங்குடியினர் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பர்லியார் ஊராட்சி நிர்வாகம் பொக்லைன் உதவியுடன் அவற்றை அகற்ற வேண்டும்.
