/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிளஸ் டூ ஆங்கில பாடத் தேர்வு ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்
/
பிளஸ் டூ ஆங்கில பாடத் தேர்வு ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்
பிளஸ் டூ ஆங்கில பாடத் தேர்வு ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்
பிளஸ் டூ ஆங்கில பாடத் தேர்வு ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்
ADDED : மார் 05, 2024 11:04 PM

அன்னூர்;பிளஸ் 2 ஆங்கில பாடத் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.
அன்னூர் வட்டாரத்தில், அன்னூர், சொக்கம்பாளையம், ஆனையூர், கெம்பநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் கே.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி என, ஆறு பள்ளிகளை சேர்ந்த பிளஸ் டூ மாணவ மாணவியர் அன்னூரில் இரண்டு மையங்களில் நேற்று தேர்வு எழுதினர். நேற்று ஆங்கில பாடத்திற்கான தேர்வு நடந்தது.
ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்
திருநாவுக்கரசு, கரியாம்பாளையம்:
தேர்வில் மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இதில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தன. ஐந்து மதிப்பெண் வினாக்களும் கடினமாக இருந்தது. மூன்று மதிப்பெண் வினாக்கள் மட்டும் எளிதாக இருந்தது.
ரியாஸ், அன்னூர்:
ஐந்து மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தது. எனினும் எளிதாக தேர்ச்சி பெறலாம்.
ராஜு, கெம்பநாயக்கன்பாளையம்:
பெரும்பாலும் படித்ததில் இருந்தே வினாக்கள் வந்திருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள் தவிர மற்ற வினாக்கள் அனைத்தும் மிக எளிதாக இருந்தது. எளிதாக தேர்ச்சி பெறலாம். 60 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும்.

