/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வரும் 19ம் தேதி மூன்று பகுதிகளில் மின் தடை
/
வரும் 19ம் தேதி மூன்று பகுதிகளில் மின் தடை
ADDED : அக் 16, 2024 08:50 PM
ஊட்டி : 'மின்பாதை பராமரிப்பு பணியை ஒட்டி இம்மாதம், 19 ம் தேதி மூன்று துணை மின் நிலையங்களில் மின் வினியோகம் இருக்காது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் அறிக்கை:
மின் பாதைகளில் பராமரிப்பு பணியை ஒட்டி, வரும், 19 ம் தேதி கீழ்கண்ட துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
ஊட்டி துணை மின் நிலையம்
ஊட்டி நகரம், பிங்கர் போஸ்ட், காந்தள், தமிழகம், ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பே கேசில், கேத்தி, நொண்டிமேடு, தலையாட்டிமந்து, இத்தலார், எம்.பாலாடா.
மலர் பெட்டு துணை மின் நிலையம்
இந்திரா நகர், மேல் தாவணெ, மல்லிகொரை, மேலுார், கக்கேரி, கோழிப்பண்ணை, ஓடக்காடு, உல்லத்தி, சக்தி நகர்.
ஜெகதளா துணை மின் நிலையம்
அருவங்காடு, குன்னுார், பர்லியார், வண்டிசோலை, சிங்காரா, வெலிங்டன். புரூக்லேண்ட், ஆடர்லி, பெட்போர்டு, ஓட்டுப்பட்டறை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ்பார்க், இளித்துரை, ஒசஹட்டி, உபதலை, எடப்பள்ளி, மவுன்ட் பிளசண்ட் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.