/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை சரிவில் விழுந்த கர்ப்பிணி யானை பலி
/
மலை சரிவில் விழுந்த கர்ப்பிணி யானை பலி
ADDED : செப் 16, 2025 09:51 PM

குன்னுார்; குன்னுாரில் மலை சரிவில் விழுந்து கர்ப்பிணி யானை உயிரிழந்தது.
குன்னுார் கோழிக்கரை கிராமத்தின் அருகில் நேற்று முன்தினம் யானை உயிரிழந்து, அழுகிய நிலையில் இருப்பதாக வனத்துறைக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.
அங்கு குட்டியுடன் இரு யானைகள் உலா வந்த நிலையில் நேற்று காலை, நீலகிரி உதவி வன பாதுகாவலர் மணிமாறன், குன்னுார் ரேஞ்சர் ரவீந்திரநாத், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் உட்பட வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
மிகவும் சரிவான இடத்தில் யானையின் வயிறு பகுதி மரத்தில் சிக்கியவாறும், வயிற்றில் இருந்த குட்டி வெளியேறிய நிலையில் தொங்கி கொண்டிருந்தது. அந்த பகுதியில் பிரேத பரிசோதனை செய்ய முடியாத நிலை இருந்ததால், 50 அடி தாழ்வான பகுதியில் குழி தோண்டப்பட்டது.
பிறகு, தாழ்வான பகுதியில் தள்ளிவிடப்பட்டது. அதன்பின், பிரேத பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரித்து அறிக்கை தயார் செய்தனர். இதன் உடல் பாகங்கள் புதைக்காமல் அதே இடத்தில் மற்ற வன உயிரினங்கள் உட்கொள்ள விட்டு சென்றனர். டி.எப்.ஓ., .கவுதம் கூறுகையில், '' இப்பகுதியில், 40 வயதான பெண் யானை இறந்து, 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியுள்ளது. தும்பிக்கையின் ஒரு பகுதியை புலி கடித்து சென்று இருக்கலாம்,'' என்றார்.