UPDATED : நவ 05, 2026 11:59 PM
ADDED : நவ 04, 2026 08:47 PM
கூடலுார்:
மசினகுடி, சிங்கார அருகே, தனியார் எஸ்டேட் ஓடை பகுதியில் காட்டு யானை இறந்து கிடந்தது.
முதுமலை, மசின குடி வனக்கோட்டம், சிங்கார வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் வன ஊழியர்கள் நேற்று முன்தினம், கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள தனியார் எஸ்டேட், பகுதியில் பெண் காட்டு யானை உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
தகவல் அறிந்த வனச்சரகர் விமல்குமார் மற்றும் வன ஊழியர்கள் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை தெப்பக்காடு வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் நேற்று பிரேத பரிசோதனை செய்தார்.
வனத்துறையினர் கூறுகையில்,‘இறந்த பெண் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு கிடைத்த பின், உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும். அதன் அடிப்படையில் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்,’ என்றனர்.
