UPDATED : அக் 20, 2026 07:10 PM
ADDED : அக் 20, 2026 07:06 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: நீலகிரி படுகா தொரையர் நல முன்னேற்ற சங்கம் சார்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 பொது தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு, பரிசளிப்பு விழா நடந்தது.
சங்க செயலாளர் மனோகரன் வரவேற்றார். தலைவர் செல்லன் தலைமை வகித்தார். ஊட்டி எம்.எல்.ஏ., போஜராஜன், குன்னுார் எம்.எல்.ஏ., ராஜூ ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். மேலும், விளையாட்டு, மற்றும் அறிவுத்திறன் உட்பட, தனித்திறன் போட்டிகளில் சாதித்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., வெள்ளிங்கிரி, சென்னை எஸ்.ஆர். எம்., பல்கலைக்கழக டீன் டாக்டர். சக்தி கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
