தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சித்தூர் துஞ்சன் மடத்தில் இன்று வித்யாரம்பம்

சித்தூர் துஞ்சன் மடத்தில் இன்று வித்யாரம்பம்

சித்தூர் துஞ்சன் மடத்தில் இன்று வித்யாரம்பம்


UPDATED : அக் 21, 2026 12:00 AM

ADDED : அக் 20, 2026 07:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 12:00 AM ADDED : அக் 20, 2026 07:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், சித்தூரில் சோகநாசினி ஆற்றின் கரையில் அமைந்துள்ள துஞ்சன் மடம், மலையாள இலக்கிய வரலாற்றின் முதன்மைப் பண்பாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

விஜயதசமி தினமான இன்று காலை, 7:00 மணிக்கு வித்யாரம்பச் சடங்குகள் தொடங்கும். இதையொட்டி குழந்தைகளுடன் பெற்றோர்களும் அதிகளவில் வருகை தரவுள்ளதால், மடத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எழுத்தச்சனின் சமாதிக்கு நேர் எதிரே உள்ள அரங்கில், குழந்தைகள் மடியில் அமர்த்தப்பட்டு எழுத்தறிவு புகட்டப்படும்.

அவர் வழிபட்ட சிலைகள், அவரது எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடிகளுக்குச் செய்யப்படும் சிறப்பு பூஜைகளுடன் சடங்குகள் ஆரம்பமாகும்.

தலைமைப்பூசாரி நாராயணன்குட்டி, முதல் குழந்தைக்கு 'திருமதுரம்' என்ற இனிப்பு வழங்கி வித்யாரம்பத்தைத் தொடங்கி வைக்கிறார்.

வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த, எட்டு முன்னணி ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு முதல் எழுத்தைக் கற்பிக்கவுள்ளனர்.

அறிவுலகில் அடியெடுத்து வைக்கும் மழலைகளின் வருகையால், சோகநாசினி ஆற்றங்கரை இன்று மீண்டும் எழுத்துத் திருவிழாக்கோலம் காண்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us