/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இ---பாஸ் கிடைப்பதில் பிரச்னை; சுற்றுலா பயணிகள் அவதி
/
இ---பாஸ் கிடைப்பதில் பிரச்னை; சுற்றுலா பயணிகள் அவதி
இ---பாஸ் கிடைப்பதில் பிரச்னை; சுற்றுலா பயணிகள் அவதி
இ---பாஸ் கிடைப்பதில் பிரச்னை; சுற்றுலா பயணிகள் அவதி
ADDED : ஏப் 06, 2025 09:36 PM

கூடலுார்; 'சர்வரில்' ஏற்பட்ட பிரச்னையால், கேரளாவில் இருந்து, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், கூடலுாரை ஒட்டிய மாநில எல்லையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
கோடையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, கடந்த 1ம் தேதி முதல், வார நாட்களில், 6,000 ஆயிரம் வாகனங்கள்; இறுதி நாட்களில், 8,000 வாகனங்களை இ- பாஸ் பதிவு முறையில் அனுமதிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த பணி நடைமுறையில் உள்ளது.
விடுமுறை நாட்களில், சர்வரில் அடிக்கடி ஏற்படும் பிரச்னையால் இ----பாஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். நேற்று வார விடுமுறை என்பதால், கேரளாவில் இருந்து, கூடலுார் நாடுகாணி வழியாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகை தந்தனர். ஊழியர்கள் இ--பாஸ் சோதனை செய்த பின் அனுமதித்தனர்.
இந்நிலையில், சர்வரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, நேற்று காலை ஒரு மணி நேரத்துக்கு மேலாக, இ--பாஸ் பதிவு செய்ய செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர்.
இதனால், இரண்டு கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிறுத்தப்பட்டது, வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது. தொடர் முயற்சிக்கு பின், இ-பாஸ் பதிவிறக்கம் செய்து பயணித்தனர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'சர்வரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இ--பாஸ் கிடைக்காமல், நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதுபோன்ற பிரச்னை ஏற்படும் போது, சுற்றுலா வாகனங்கள் தடையின்றி, பயணத்தை தொடர, மாவட்ட நிர்வாகம் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.