/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளியில் பி.டி.ஏ., புதிய நிர்வாகிகள் தேர்வு
/
அரசு பள்ளியில் பி.டி.ஏ., புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : டிச 27, 2024 10:20 PM
கோத்தகிரி; கோத்தகிரி தும்மனட்டி அரசுமேல்நிலைப் பள்ளியில் பி.டி.ஏ., புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதில், பள்ளி முன்னாள் மாணவர், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைவராகவும், துணைத் தலைவராக மாஸ்தி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ், கிராம தலைவர் ராமகிருஷ்ணன், நாக்கு பெட்டா நல சங்க தலைவர் பாபு மற்றும் தும்மனாட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி உட்பட, 11 கிராம தலைவர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், ''வரும் கல்வி ஆண்டில் பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கையை அதிக படுத்த முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், பள்ளி வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்,''என்றார்.

