/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராம்சந்த் சாலை சேதம்; வாகனங்கள் சென்றுவர சிரமம்
/
ராம்சந்த் சாலை சேதம்; வாகனங்கள் சென்றுவர சிரமம்
ADDED : ஆக 05, 2025 10:32 PM

கோத்தகிரி; கோத்தகிரி பஸ் நிலையம் தாலுகா அலுவலகம் வழியாக, ராமசந்த் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளதால், வாகனங்கள் சென்று வர சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், தொலைபேசி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நுாலகம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட, அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன.
இதனால், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் நாள்தோறும் அதிகமாக உள்ளது.
இச்சாலை, பல மாதங்களாக, சீரமைக்கப்படாமல், குழிகள் நிறைந்து காணப்படுகிறது. தற்போது, மழை பெய்து வருவதால், குழிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகனங்கள் சென்று வருவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் சிரமத்திற்கு இடையே, நடந்து சென்று வருகின்றனர்.
குறிப்பாக, பாலிடெக்னிக் உட்பட, பள்ளி மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

