/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் சிறுவர், சிறுமியர் பங்கேற்ற சாலை விழிப்புணர்வு பேரணி
/
ஊட்டியில் சிறுவர், சிறுமியர் பங்கேற்ற சாலை விழிப்புணர்வு பேரணி
ஊட்டியில் சிறுவர், சிறுமியர் பங்கேற்ற சாலை விழிப்புணர்வு பேரணி
ஊட்டியில் சிறுவர், சிறுமியர் பங்கேற்ற சாலை விழிப்புணர்வு பேரணி
ADDED : நவ 14, 2025 09:05 PM

ஊட்டி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஊட்டியில் சிறுவர், சிறுமியர் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஊட்டி கிரசன்ட் மழலையர் பள்ளி சார்பில், அரசு தாவரவியல் பூங்காவில் பேரணியை, கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் உமர் பரூக் முன்னிலை வகித்தார். பூங்கா சாலை வழியாக சென்ற பேரணி, அசெம்ளி திரையங்கம் பகுதியில் நிறைவடைந்தது. அதில், 'சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து இல்லாமல் வாகனங்களை இயக்குவது; வாகனங்கள் வரும் திசைகளை பார்த்த பின்பு சாலையை கடப்பது; மொபைல் போன் பயன்படுத்தி கொண்டு வாகனங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும்; கூடுமானவரை மொபைல் போனை கல்வி சம்பந்தப்பட்ட அவசியங்கள் தவிர, மற்ற நேரங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளி சிறுவர், சிறுமியர் குட்டி சைக்கிள் மற்றும் வாகனங்களுடன் பேரணியில் பங்கேற்றனர். டி.எஸ்.பி., நவீன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.