தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலை சீரமைப்பு பணி அடுத்த மாதம் முடிக்க உறுதி

 சாலை சீரமைப்பு பணி அடுத்த மாதம் முடிக்க உறுதி

 சாலை சீரமைப்பு பணி அடுத்த மாதம் முடிக்க உறுதி


ADDED : பிப் 28, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட உல்லத்தட்டி கிராமத்தில், 'பிரதம மந்திரி சதக் யோஜனா' சாலை அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில், முழுமை பெறாமல் இருந்தது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உட்பட, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கல்லை. இதனால், கிராம பெண்கள் உட்பட, பொது மக்கள் சாலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டி ருந்தனர். துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சமரசம் செய்ததை அடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவகுமார், கலெக்டருக்கு விளக்கம் அளித்தார். அதில், 'சாலை அமைக்கும் பணி பராமரிப்பு காலத்தில் உள்ளது. பராமரிப்புக்கு தேவையான, பொருட்கள் வந்துவிட்டன. வரும், 5ம் தேதிக்குள் பணி முழுமை பெறும்,' என, தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us