UPDATED : நவ 01, 2026 06:50 PM
ADDED : நவ 01, 2026 06:46 PM

கூடலூர்: முதுமலை, மசினகுடியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலம் மசினகுடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து மதியம் 3:00 மணிக்கு துங்கியது. ஊர்வலத்துக்கு மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். ஊர்வலத்தை ஆதி கர்நாடக சங்கத் தலைவர் கரியன் துவக்கி வைத்தார்.
ஊர்வலம் மாயார் சாலை, சிவக்குமார் காலனி, தர்காசாலை, ஊட்டி சாலை வழியாக சென்று மசினகுடி பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது.
அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு விவசாயி மாரி தலைமை வகித்தார். வினோத்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் ஆர்.எஸ்.எஸ்., கோட்ட இணைச்செயலாளர் விஜய் பங்கேற்று, 'ஆர்.எஸ்.எஸ்., கோட்பாடுகள், மக்கள் பணிகள் குறித்து பேசினார்.
ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட, வட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் சீருடையில் பங்கேற்றனர். ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடந்தது.
