/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அறிவியல் எழுத்தறிவு வெறும் 2.5 சதவீதம்; நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் வருத்தம்
/
அறிவியல் எழுத்தறிவு வெறும் 2.5 சதவீதம்; நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் வருத்தம்
அறிவியல் எழுத்தறிவு வெறும் 2.5 சதவீதம்; நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் வருத்தம்
அறிவியல் எழுத்தறிவு வெறும் 2.5 சதவீதம்; நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் வருத்தம்
ADDED : அக் 01, 2025 11:44 PM
கோத்தகிரி; கோத்தகிரி கிரீன்வேலி மேல்நிலைப்பள்ளி சார்பில், நாட்டு நலப் பணித்திட்ட முகாம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் கங்காதரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், சினிமா பிரமுகர்களின் பற்றிய விவரங்களை தெரிந்த அளவுக்கு, விஞ்ஞானி, பொருளாதார நிபுணர் அல்லது சமூக சேவகர் குறித்த விவரங்கள் தெரியாமல் உள்ளது.
மக்களிடையே, அறிவியல், பொருளாதாரம், பொது சுகாதாரம் மற்றும் அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட சோக சம்பவம், எளிய மக்களின் அறியாமையை வெளிக்காட்டுகிறது. கிராமப்புறங்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதன் வாயிலாக, மாணவ சமுதாயம் மற்றும் கீழ்த்தட்டு மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தெரிந்துகொள்ள வழி வகுக்கிறது.
மக்களிடையே விழிப்புணர்வை பரப்பும் நோக்கத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு அறிவொளி இயக்கம் துவக்கப்பட்டதால், மக்கள் எழுத படிக்க தெரிந்து கொண்டனர்.
அதே நேரத்தில், மக்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு மற்றும் அறிவியல் மனோபாவம் பரவ வேண்டும். நம் நாட்டில் அறிவியல் எழுத்தறிவு, 2.5 சதவீதம் மட்டுமே. தென்கொரியாவில், 85 சதவீதமாக உள்ளது. நமது நாட்டின் பொருளாதார கொள்கை ஒரு சில கார்ப்பரேட்களுக்கானது.
காந்தியடிகள் முன்னெடுத்த பொருளதாரக் கொள்கை, அனைவரும் நலம்பெற வேண்டும் என்பதாகும். அவர், கிராம பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்தார். அன்றாட வாழ்க்கைக்கு தேவையான விழிப்புணர்வும் நம் தலைவர்களுக்கு இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
மக்கள் தரம் உள்ளவர்களாக இருந்தால் தான், நாடு முன்னேறி, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும். இந்த இலக்கை நோக்கி மாணவ சமுதாயம் முன்னேறி, மக்களுக்கு கை கொடுத்து துாக்கி விட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். ஒருங்கிணைப்பாளர் சதீஷ் நன்றி கூறினார்.