/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தீயணைப்பு துறையில் சிறப்பு பயிற்சி ; சீருடைகளும் வழங்கப்பட்டதால் உற்சாகம்
/
தீயணைப்பு துறையில் சிறப்பு பயிற்சி ; சீருடைகளும் வழங்கப்பட்டதால் உற்சாகம்
தீயணைப்பு துறையில் சிறப்பு பயிற்சி ; சீருடைகளும் வழங்கப்பட்டதால் உற்சாகம்
தீயணைப்பு துறையில் சிறப்பு பயிற்சி ; சீருடைகளும் வழங்கப்பட்டதால் உற்சாகம்
ADDED : அக் 01, 2025 11:45 PM

குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் தீயணைப்பு துறையினருடன் இணைந்து, தன்னார்வலர்களும் பணியாற்றும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு, வருவதுடன் சீருடைகளும் வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில், பேரிடர் காலங்களில் தீயணைப்பு துறையினருடன் இணைந்து தன்னார்வலர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பணியாற்றி வரும், 45 வயதுக்கு உட்பட்ட தன்னார்வலர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில், 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று குன்னுார் தீயணைப்பு நிலையத்தில் மாவட்டத்தில் உள்ள, 9 தன்னார்வலர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, தலைமை வகித்த நகராட்சி துணை தலைவர் வாசிம் ராஜா, தன்னார்வலர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.
விழாவில், முன்னணி தீயணைப்பாளர் சுப்ரமணி பேசுகையில், ''கடந்த, 2009ம் ஆண்டு குன்னுார் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நடந்த நிலச்சரிவின் போது, முதல்முறையாக தன்னார்வலர் முபாரக் என்பவர் பணியாற்றினார். இதன்பிறகு தீயணைப்பு துறையினருடன் இணைந்து பல தன்னார்வலர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் சார்பில், ஊட்டி தீயணைப்பு நிலையத்தில், 45 வயதுக்குட்பட்ட தன்னார்வலர்களுக்கு, 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, சீரூடையும் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். கவுன்சிலர்கள் ராமசாமி, ஜாகிர் உட்பட கலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, தீயணைப்பு நிலை அலுவலர் குமார் தலைமையில், தீயணைப்பு துறையினர் செய்தனர்.