தன்னம்பிக்கை...திறமை...சாதனை...! மாணவர்களுக்கு பரிசளிப்பு
தன்னம்பிக்கை...திறமை...சாதனை...! மாணவர்களுக்கு பரிசளிப்பு
UPDATED : நவ 01, 2026 06:08 PM
ADDED : நவ 01, 2026 06:04 PM

மஞ்சூர்: மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசளிப்பு விழா சிறப்பாக நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தன் தலைமை வகித்தார்.
பள்ளி காலாண்டுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள், பள்ளி வருகைப் பதிவில் சிறந்து விளங்கிய மாணவர்கள், முதல் இடைப்பருவத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைவிட காலாண்டுத் தேர்வில் குறைந்தபட்சம் ஒரு மதிப்பெண்ணாவது கூடுதலாகப் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றம், தொடர் முயற்சி, ஒழுக்கம், பள்ளி வருகை மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பட்டதாரி ஆசிரியர் திருமதி ஜெயசித்ரா தொகுத்து வழங்கினார். விழா சிறப்பாக நடைபெற அனைத்து ஆசிரியர்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கினர்.
மாணவர்களின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களிடையே தன்னம்பிக்கையையும் சாதனை உணர்வையும் வளர்க்கும் வகையில் இப்பரிசளிப்பு விழா நடந்தது.
