UPDATED : நவ 16, 2026 02:41 PM
ADDED : நவ 16, 2026 02:38 PM

கூடலுார்:
கூடலுார் புளியாம்பாறையில் அமைக்கப்பட்டுள்ள கசிவு நீர் குட்டையில் மண் அரிப்பு ஏற்பட்டு, சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலுாரில் கோடை காலத்தில் வன விலங்குகளுக்கு போதிய உணவு, குடிநீர் கிடைப்பதில்லை. இதற்கு தீர்வாக வன பகுதிகளில் வனத்துறை சிறிய தடுப்பணைகளை அமைத்துள்ளது. அதில், பல தடுப்பணைகள் சேதமடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது.
இந்நிலையில், வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய புலியாம்பாறை உள்ளிட்ட சில பகுதிகளில் கசிவு நீர் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர் உயர்ந்து அப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. இங்கு, வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி இங்கு வந்து செல்கின்றன.
தற்போது, அந்த கசிவுநீர் குட்டையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடையும் அபாயம் உருவாகி வருகிறது. வன அதிகாரிகள் ஆய்வு செய்து மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
