/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலாட்படை தின 'சவுரவீர்' மராத்தான் போட்டி: ராணுவ வீரர்கள், மாணவர்கள் பங்கேற்பு
/
காலாட்படை தின 'சவுரவீர்' மராத்தான் போட்டி: ராணுவ வீரர்கள், மாணவர்கள் பங்கேற்பு
காலாட்படை தின 'சவுரவீர்' மராத்தான் போட்டி: ராணுவ வீரர்கள், மாணவர்கள் பங்கேற்பு
காலாட்படை தின 'சவுரவீர்' மராத்தான் போட்டி: ராணுவ வீரர்கள், மாணவர்கள் பங்கேற்பு
ADDED : அக் 26, 2025 11:14 PM

குன்னூர்: ராணுவத்தின் திறமை, வீரம், புகழ் வெற்றியை வெளிப்படுத்தும் வகையில், காலாட்படை தினத்தையொட்டி, சவுரவீர் மராத்தான் நடந்தது.
கடந்த, 1947 அக்., 27ல், காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில், பாகிஸ்தான் ஆதரவுடன் நுழைந்த எதிரிகளுடன் போரிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்ட வீர தீர செயலை போற்றும் வகையில், ஆண்டுதோறும், அக்.,27ல் ராணுவத்தின் சார்பில், காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது. காலாட்படையினருக்கு பயிற்சி அளித்து வரும், நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், 79வது ஆண்டு காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது.
இதில், ராணுவத்தின் திறமை, புகழ், வீரம், வெற்றியை பறைச்சாற்றும் வகையில், 'சவுரவீர் மராத்தான் -2025' நடந்தது. ராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கு 10 கி.மீ., , தூரம், பள்ளி மாணவ, மாணவியருக்கு 5 கி.மீ., தூரம் நடந்த மராத்தான், பேரக்ஸ் நாகேஷ் சதுக்கத்தில் துவங்கி, எம்.எச். சப்ளை டிப்போ, போர் நினைவு சதுக்கம் வழியாக மீண்டும் நாகேஷ் சதுக்கத்தில் நிறைவு பெற்றது ராணுவ வீரர்கள் சுதாகர், பாலச்சந்திர கவுடா, ஜாஸ் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். மாணவர்களில், ஜோஷித் (செயின்ட் ஜோசப்), தர்ஷன் (புல்மோர்), ஜான் பிரிட்டோ (செயின்ட் ஸ்டேன்ஸ் பள்ளி), மாணவியரில் ஆஷிகா (புல்மோர்), ஜோஷ்னா (புல்மோர்), மோகனாம்பிகை (செயின்ட் ஆன்ஸ் பள்ளி) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர்.
போட்டியை துவக்கி வைத்த மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணனேந்து தாஸ், வெற்றி கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.
போட்டியில் பங்கேற்றவர்களுக்கு ராணுவ அதிகாரிகள், வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர். துணை கமாண்டன்ட் குட்டப்பா, முதன்மை ரெக்கார்ட்ஸ் அலுவலர் கர்னல் கலாம் சிங், பயிற்சி பெட்டாலியன் கமாண்டன்ட் கர்னல் அபினேஷ் ரானா உட்பட பலர் பங்கேற்றனர்.

