தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு

திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு

திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு


UPDATED : நவ 06, 2026 07:41 PM

ADDED : நவ 06, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:41 PM ADDED : நவ 06, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி:

கோத்தகிரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை கோத்தகிரியை உருவாக்க, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், திடக்கழிவு மேலாண்மை மற்றும் கழிவு பிரித்து அளித்தல் குறித்த விழிப்புணர்வு திட்டம் துவக்கப்பட்டது.

நீலகிரி உயிர்மேள காப்பகத்தின் மிக முக்கிய பகுதியாக விளங்கும் கோத்தகிரியில், இயற்கை சூழல் பாதுகாத்தது, நகரத்தை தூய்மையாக பராமரிக்க, கோத்தகிரி நகராட்சி நிர்வாகம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளை வலுப்படுத்தவும், தூய்மை பணிகளை வேகப்படுத்தவும், ‘பிளான் பவுண்டேஷன்’ தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, கோத்தகிரி நகராட்சி பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.

திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்



கழிவுகளை பிரித்தளித்தல், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் வெளியேறும் கழிவுகளை, ‘மட்கும் கழிவு, மட்கா கழிவு மற்றும் அபாயகரமான கழிவுகள்,’ என, தொடக்கத்திலேயே வகைப்படுத்தி வழங்கும் பழக்கத்தை மக்களிடம் உருவாக்குவது. பொது மக்கள் இடையே, நடத்தை மாற்றம், குப்பைகளை திறந்தவெளியில் கொட்டுவதை தவிர்ப்பது, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமையாக தடுப்பது போன்ற பொறுப்பான சுற்றுச்சூழல் பழக்க வழக்கங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பது.

மேலும், எளிமையான கழிவு மேலாண்மையில், கழிவுகள் மூலத்திலேயே தரம் பிரிக்கப்படுவதால், நகராட்சி பணியாளர்களின் சேகரிப்பு மற்றும் மறு சுழற்சி பணிகள் எளிமையாகும்.

இதனால், பொதுமக்களுக்கும் கழிவு அகற்றும் செயல்முறை சிரமம் இன்றி அமையும் என்பதால், பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us