/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தென் மாநில தேயிலை ஏலம்: ரூ. 5 கோடி கூடுதல் வருவாய்
/
தென் மாநில தேயிலை ஏலம்: ரூ. 5 கோடி கூடுதல் வருவாய்
தென் மாநில தேயிலை ஏலம்: ரூ. 5 கோடி கூடுதல் வருவாய்
தென் மாநில தேயிலை ஏலம்: ரூ. 5 கோடி கூடுதல் வருவாய்
ADDED : நவ 04, 2025 08:48 PM

குன்னூர்: -தென் மாநில அளவில் தேயிலை தூள் விற்பனை அதிகரித்ததுடன், சராசரி விலையில் ஏற்றம் கண்டதால், ஒரே வாரத்தில் 5 கோடி ரூபாய் மொத்த வருவாய் உயர்ந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூர், டீசர்வ் மற்றும் கோவை, கொச்சி ஆகிய 4 தேயிலை ஏல மையங்களில் வாரந்தோறும் புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் ஏலம் நடந்து வருகிறது. நான்கு மையங்களிலும் நடந்த கடந்த 44வது ஏலங்களில், 33.49 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 31.50 லட்சம் கிலோ விற்பனையாகி, 40.68 கோடி ரூபாய் கிடைத்தது.
முன்னதாக நடந்த, 43வது ஏலத்தில், 31.59 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 28.87 லட்சம் கிலோ விற்று, 35.63 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. 43வது ஏலத்தை ஒப்பிடுகையில், 1.90 லட்சம் கிலோ வரத்தும், 2.63 லட்சம் கிலோ விற்பனையும் அதிகரித்தது. விற்பனை அதிகரித்து, சராசரி விலையும் ஏற்றம் கண்டதால், ஒரே வாரத்தில் 5.05 கோடி ரூபாய் உயர்ந்தது.

