/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட அளவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருடன் ஆலோசனை கூட்டம்
/
மாவட்ட அளவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருடன் ஆலோசனை கூட்டம்
மாவட்ட அளவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருடன் ஆலோசனை கூட்டம்
மாவட்ட அளவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருடன் ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 30, 2025 10:55 PM

ஊட்டி:  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 தொடர்பாக மாவட்ட அளவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான அவசியம் தேவை குறித்து விளக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது,
வாக்காளர் பட்டியலில் உறுப்பினராக சேர இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 326ன் படி அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
குறைந்தது 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
தகுதி நீக்கம் எந்த சட்டத்தின் படியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக இருக்க கூடாது. நவ., 4-ம் தேதி, டிச., 4-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடக்கும். பயிற்சி பெற்ற அலுவலர்கள் வீடு வீடாக சென்று தீவிர திருத்தத்திற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கி அவற்றை பூர்த்தி செய்து பெறுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் அடையாள அட்டை, ஓய்வூதிய தொகை உத்தரவு, 1987 ஜூலை 1க்கு முன் அரசு, உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், ஆதார் ஆகிய 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து வழங்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் வரும் டிச.,  9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். டிச., 9-ம்  தேதி முதல் ஜன., 31-ம் தேதி வரை திருத்தம் செய்தல், சரி பார்த்தல் பணிகள் முடிக்கப்பட்டு இறுதி பட்டியல் அடுத்த ஆண்டு பிப்., 7-ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில், குன்னூர் சப்--கலெக்டர் சங்கீதா, ஆர்.டி.ஓ.,க்கள் டினு அரவிந்த், குணசேகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லோகநாயகி, ஊட்டி நகராட்சி ஆணையார் கணேசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

