ADDED : அக் 30, 2025 10:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலூர்-:  பந்தலூர் அருகே கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி, சாலையோர பள்ளத்தில் இறங்கியது.
ஈரோடு பகுதியில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை  ஏற்றிய லாரி ஒன்று, எருமாடு பகுதிக்கு சென்றது. அப்போது மேங்கோரேஞ்ச் என்ற இடத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கொடுக்க, முற்பட்டபோது சாலையோர பள்ளத்தில் லாரி இறங்கியது.
ஓரப்பகுதியை ஒட்டி மேடுபாங்கான இடமாக இருந்ததால் பெரிய அளவிலான ஆபத்து ஏற்படவில்லை. வேறு லாரி வரவழைக்கப்பட்டு, சிலிண்டர்களை ஏற்றிய பிறகே லாரியை மீட்க இயலும் என டிரைவர் தெரிவித்தார். இதனால் அந்த மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன.

