/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புத்தாண்டுக்கான சிறப்பு மலை ரயில் இயக்கம்
/
புத்தாண்டுக்கான சிறப்பு மலை ரயில் இயக்கம்
ADDED : டிச 25, 2024 08:06 PM

குன்னுார்; கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி, ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்கள் இயக்கம் துவங்கியது.
குன்னுார் - ஊட்டி இடையே தினமும் தலா நான்கு முறை; மேட்டுப்பாளையம் -ஊட்டி இடையே தலா ஒரு முறையும் மலை ரயில் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், இந்த ரயில்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுகிறது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ்,புத்தாண்டு விடுமுறையையொட்டி, நம் நாட்டின் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இதனால், நேற்று துவங்கிய சிறப்பு மலை ரயில்கள், வரும், 2ம் தேதி வரை இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, நேற்று காலை, 9:10 மணிக்கு புறப்பட்ட மலை ரயிலில்,'முதல் வகுப்பில், 80 மற்றும் 2ம் வகுப்பில், 140,' என, இருக்கைகள் நிரம்பியது. இந்த ரயில் நாளை ஊட்டியில் இருந்து காலை, 11:25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்கிறது.
இதேபோல, குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு தினமும் காலை, 8:20 மணிக்கும், ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு மாலை, 4:45 மணிக்கு என சிறப்பு ரயில்கள் இயக்கம் துவங்கியது. மேலும், 'ரவுண்ட் டிரிப் ஜாய் டிரைன்' ஊட்டி-கேத்தி இடையே ரயில் காலை, 9:45 மணி;11: 35 மணி; மாலை 3:00 மணி என தினமும், 3 முறை சுற்று ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது.