ADDED : நவ 10, 2026 06:27 PM

அ நிறம் | அளவு
பந்தலுார்: கந்த சஷ்டியை முன்னிட்டு, பந்தலுார் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடத்தப்பட்டது.
கந்த சஷ்டி விரதம் இன்று (நவ.,10) துவங்கியதை தொடர்ந்து, பந்தலுார் முருகன் கோவிலில் அதிகாலை முதல் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டது. வரும், 16ம் தேதி மாலை, 4:00 மணிக்கு வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் மற்றும் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்பாடுகளை முருகன் கோவில் கமிட்டி தலைவர் ஹரிராமன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
