/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
/
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : செப் 28, 2025 10:05 PM
ஊட்டி, ; புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும், வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இம்மாதத்தில் சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்கு பெருமாளுக்கு படையல் போடுவர். வீட்டில் கோவிந்தா கோஷமிட்டு வேங்கடவனை வழிபடுவர்.
இந்நிலையில், ஊட்டி, கூடலுார், கோத்தகிரி, குன்னுார், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் காலை முதல் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள வேணு கோபால சுவாமி, எச்.பி.எப்., பகுதி பாலாஜி கோவில் உட்பட பல்வேறு பெருமாள் கோவில்களுக்கு பொதுமக்கள் சென்று வழிபட்டனர்.
ஊட்டி வேணுகோபால சுவாமி மற்றும் சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள்நடந்தது. அதில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.