/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நாற்காலி, டேபிள் இல்லாததால் மாணவர்கள் குளிரிலும், அட்டை பூச்சி கடியிலும் அவதி
/
நாற்காலி, டேபிள் இல்லாததால் மாணவர்கள் குளிரிலும், அட்டை பூச்சி கடியிலும் அவதி
நாற்காலி, டேபிள் இல்லாததால் மாணவர்கள் குளிரிலும், அட்டை பூச்சி கடியிலும் அவதி
நாற்காலி, டேபிள் இல்லாததால் மாணவர்கள் குளிரிலும், அட்டை பூச்சி கடியிலும் அவதி
ADDED : அக் 25, 2025 08:07 PM

பந்தலுார்:முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய, பென்னை பழங்குடியின பள்ளியில், தளவாட பொருட்கள் இல்லாததால், பழங்குடியின மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகி ரி மாவட்டம், பந்தலுார் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி பென்னை பழங்குடியின அரசு ஆரம்ப பள்ளியில், 17 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
பள்ளிக்கு கட்டட வசதி இல்லாத நிலையில், இரண்டு பழங்குடியின குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு, வகுப்பறை, சமையல் அறை வசதி ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், பள்ளி அலுவலகம், வகுப்பறையில் மாணவர்கள் ப யன்படுத்த தளவாட பொருட்கள் இல்லை. குளிரான கால நிலையில் பாயை விரித்து தரையில் அமர்ந்து பாடங்களை படித்து வருகின்றனர். ஆசிரியர்கள் அமர இருக்கை வசதிகள் இல்லாததால், ஆசிரியர்களும் தரையில் அமர்ந்து பாடங்களை கற்று கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெற்றோர் கூறுகையில், 'பள்ளியில் இருந்த தளவாடங்கள், ஸ்மார்ட் வகுப்பறை பொருட்கள் என்ன ஆனது என தெரியவில்லை. குளிர் நிலவும் இப்பகுதியில் அட்டை பூச்சிகள் கடியுடன் குழந்தைகள் தரையில் அமர்ந்து படிப்பதால் உடல்நலம் பாதிக்கிறது. கல்வி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
வட்டா ர தொடக்க கல்வி அலுவலர் வாசுகி கூறுகையில், ''பழைய தளவாட பொருட்கள் பழுதடைந்துள்ளது. பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு புதிதாக தளவாட பொருட்கள் வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

