'தமிழ்நாடு' பெயர் சூட்டப்பட்ட நாள் மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி
'தமிழ்நாடு' பெயர் சூட்டப்பட்ட நாள் மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி
ADDED : ஜூலை 17, 2026 05:18 AM
ஊட்டி: மதராஸ் மாகாணத்திற்கு, 'தமிழ்நாடு' என பெயர் சூட்டப்பட்ட, ஜூலை, 18ம் தேதியை பெருமைப்படுத்தும் விதமாக, மாவட்டம் தோறும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட உள்ளது.
அதன்படி, ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று முன்தினம், 6 முதல், பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினார். அதில், 51 மாணவர்கள் பேச்சு போட்டியிலும், 48 மாணவர்கள் கட்டுரை போட்டியிலும் பங்கேற்றனர்.
மினிதேன் அரசு உயர்நிலைப்பள்ளி, 6ம் வகுப்பு மாணவி ஹர்சிதா, நெடுகுளா அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவர் அதன்யா மற்றும் யானிஷா முறையே, முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர்.
பேச்சு போட்டியில், புத்துார்வயல் அரசு உயர்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் நிகரலி, 6ம் வகுப்பு மாணவர் விஷாக் மற்றும் ஏகலைவா மாதிரி மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி சுமிதா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் சாதித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை, நீலகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை ஒருங்கிணைத்தது.
