/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோரிக்கை 'பேட்ச்' அணிந்து பணியாற்றும் ஆசிரியர்கள்
/
கோரிக்கை 'பேட்ச்' அணிந்து பணியாற்றும் ஆசிரியர்கள்
கோரிக்கை 'பேட்ச்' அணிந்து பணியாற்றும் ஆசிரியர்கள்
கோரிக்கை 'பேட்ச்' அணிந்து பணியாற்றும் ஆசிரியர்கள்
ADDED : டிச 12, 2025 07:10 AM
கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 'சம வேலைக்கு சம ஊதியம்' தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, 'பேட்ச்' அணிந்து, பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலத்தில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 'சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்,' என, தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆட்சிக்கு வந்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும், 2009ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த,150 இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், 24ம் தேதி முதல், சென்னையில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.