/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒழுக்கமான வழியே மாணவர் முன்னேற்றத்திற்கு 'வழி'; யு.கே ஜி., பட்டமளிப்பு விழாவில் அறிவுரை

ADDED : பிப் 04, 2024 10:25 PM

குன்னுார்:அன்பு, வழிகாட்டுதல், கண்காணிப்பு இருந்தால் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும், என யோகா மற்றும் தியான பயிற்றுநர் புனிதா ஜெட்டின் தானி பேசினார்.
குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள ஹோலி இன்னசென்ட் பள்ளியில் யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக யோகா மற்றும் தியான பயிற்றுநர் புனிதா ஜெட்டின் தானி பங்கேற்று பேசுகையில், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் அன்பு, வழிகாட்டுதல், கண்காணிப்பு இருந்தால் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.
இதே பள்ளியில் எனது மகள்கள் படித்த போது இந்த மூன்று செயல்களும் நிரூபித்துள்ளது என்பதை கூற கடமைபட்டுள்ளேன். தற்போது வாழ்வில் முன்னேற ஒழுக்கம் அவசியம் என்ற நிலை உள்ளது. பெற்றோரும், ஆசிரியர்களும், ஒழுக்கம் நிறைந்த இளைய தலைமுறையினரை உருவாக்க இந்த 3 செயல்களையும் அவசியம் பின்பற்ற வேண்டும், என்றார். குழந்தைகள் பிரஜ்வல், ஷாலினி சிலம்பாட்டம் அனைவரையும் கவர்ந்தது.
பள்ளி மாணவர்களின் வரவேற்பு நடனம், பரத நாட்டியம் அருணாசல பிரதேச கலாசார நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
'பிரைவேட் டீச்சர்ஸ் பாரம்' அமைப்பின் சிறந்த தலைமையாசிரியருக்கான விருதை அருட்சகோதரி ஆவியா வாஸ் பெற்றார்.
கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்வு முடிவுகளை மாணவர்கள் பெறும் வகையில் பணியாற்றிய ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள். கோப்பைகள் வழங்கப்பட்டன.