ADDED : அக் 25, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
ஊட்டி:
பூங்காவில் சிதிலமடைந்து காணப்படும் நடைப்பாதைகளை சீரமைக்க வேண்டும். என , வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை , இத்தாலியன் கார்டன் , பெரணி இல்லம் உட்பட பல் வேறு பகுதிகளில் உள்ள மலர்களை ரசிக்க சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பூங்காவில் அந்தந்த பகுதிகளுக்கு செல்ல நடைபாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் பூங்காவில் அனைத்து பகுதிகளிலும் புரைமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இத்தாலியன் கார்டன் பகுதியில் அமைக்கப்பட்ட நடைபாதை உடைந்து காணப்படுவதால் சுற்றுலா பயணியர் சிரமத்திற்கு இடையே நடந்து சென்று மலர்களை ரசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணியரின் நலன் கருதி பூங்கா நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். என , வலியுறுத்தப்பட்டுள்ளது.
