தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊட்டி ரயில் பயணம் சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஊட்டி ரயில் பயணம் சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஊட்டி ரயில் பயணம் சுற்றுலா பயணிகள் ஆர்வம்


UPDATED : நவ 10, 2026 09:35 AM

ADDED : நவ 10, 2026 09:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 09:35 AM ADDED : நவ 10, 2026 09:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஊட்டி– குன்னுார் மலை ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

குன்னுாரிலிருந்து ஊட்டிக்கு, காலை, 7:45, 10:40, பகல் 12:35 மற்றும் மாலை, 4:00 மணிக்கும், மறுமார்க்கமாக, ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு காலை, 9:15, பகல் 12:15, மதியம் 2:00 மற்றும் மாலை 5:30 மணிக்கும் வழக்கமான ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு காலை, 9:20 மணி; மதியம் 1:50 மணிக்கும், ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு பகல், 11:10 மணி; மாலை 3:10 மணிக்கும், வெள்ளி முதல் திங்கள் வரை சிறப்பு மலை ரயில்களும் தற்போது இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை கூடுதலாக உள்ளது. இவர்கள், ஊட்டி–குன்னுார் ரயிலில் பயணம் செய்ய அலைமோதுகின்றனர்.

மழையால் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் நிலச்சரிவால் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், கடந்த, 17 நாட்களாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி இயக்கப்படும் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ஊட்டி– குன்னுார் ரயிலில் கூட்டம் அதிகரித்து வருவதால், கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us