தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தீர்வு எப்போது? நீலகிரியில் தொடரும் நிலச்சரிவு சம்பவம்: தொலை நோக்கு திட்டம் அவசர அவசியம்

தீர்வு எப்போது? நீலகிரியில் தொடரும் நிலச்சரிவு சம்பவம்: தொலை நோக்கு திட்டம் அவசர அவசியம்

தீர்வு எப்போது? நீலகிரியில் தொடரும் நிலச்சரிவு சம்பவம்: தொலை நோக்கு திட்டம் அவசர அவசியம்


ADDED : நவ 10, 2026 03:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 03:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் – மேட்டுப் பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள பர்லியார் பகுதியில் தொடரும் நிலச்சரிவுகளை அரசின் நிபுணர் குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து எதிர்கால பேரிடரை எதிர்கொள்வதற்கான தொலை நோக்கு திட்டங்களை வகுக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில், இயற்கை செல்வங்கள் அழிக்கப்படுவதால், வடகிழக்கு பருவ மழையின் போது, நிலச்சரிவு உட்பட பேரிடர் அதிகரித்து வருகின்றன. வனங்கள் சூழ்ந்த பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் உள்ள மரங்கள் மற்றும் செங்குந்தான பகுதிகளில் மலையை குடைந்து நடக்கும் கட்டுமான பணிகளால் மழைகால இயற்கை பேரிடரை தடுக்க முடியாத சூழல் அதிகரித்து வருகிறது.

யானை வழித்தட பாதிப்பு



இங்கு உள்ள யானை வழித்தடங்கள், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஐகோர்ட் உத்தரவின் பேரில் காக்கப்பட்டன. அதில், அப்பகுதியில் இருந்த ‘குரும்பா ரிசார்ட்’ மூடப்பட்ட போதும், இதன் அருகில் உள்ள புதுக்காடு -மற்றும் ஹில்குரோவ் இடையே உள்ள மரங்கள், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, ‘அலமேலு சீனிவாசா வென்ச்சர்’ என்ற நிறுவனம் சாலையை அமைத்தது. சமூக ஆர்வலர்களின் புகாரின் பேரில், குன்னுார் கூடுதல் கலெக்டர் தலைமையிலான சிறப்பு குழுவின் கள ஆய்வில், 17 விதிமீறல் மனைப்பிரிவுகளின் பட்டியல் எடுக்கப்பட்டு, உறுதி செய்து தடை விதிக்கப்பட்டது.

சூழலியல் மாற்றம்



நீலகிரியின் மிக செங்குத்தான மற்றும் பழமையான மலை நிலப்பரப்பில் ஒன்றாக உள்ள, கூழாங்கல் ஆறு என்று பொருள்படும் பர்லியார் சரிவுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வரும் பூர்வகுடி இருளர் மற்றும் குறும்பர்களின் வாழ்விடமாகும். அதில், மேட்டுப்பாளையம்- குன்னுார் சாலை அமைக்கப்பட்ட போது, பர்லியார் சாலை பயணிகளுக்கான ஒரு தங்குமிடமாக மாறியது.

மேலும், கடந்த, 30 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களுடன் வெளியிலிருந்து வந்த வணிக ஆர்வலர்கள் இப்பகுதியில் நுழைந்தபோது பர்லியார் சூழலியல் பாதிப்பு அதிகரித்தது. இதன் விளைவாக, இப்பகுதி, 1998, 2009 மற்றும் 2015ம் ஆண்டுகளில் உள்கட்டமைப்பில் பெரும் சேதங்களைசந்தித்தது.

வல்லுனர்களின் ஆராய்ச்சி



நீலகிரி மலை பகுதிகளில் பேரிடர் பாதிப்புகள் ஏற்படுவது குறித்து, கடந்த,1978ல் இருந்து மத்திய, மாநில அரசுகளின் புவியியல் வல்லுனர்கள், தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

அதில்,2012 மற்றும்2013ம் ஆண்டுகளில், இரு விஞ்ஞானிகள் பர்லியாரில் இருந்து குன்னுார் வரையிலான தாழ்வார பகுதிகளில் மழை பொழிவினால் ஏற்படும் நிலச்சரிவுகளுக்கான ஆபத்து, பாதிக்கப்படும் பகுதிகளின் தன்மை மற்றும் பேரிடம் மதிப்பீடு குறித்து ஆழமான ஆய்வை மேற்கொண்டு அரசிடம் சமர்பித்தனர்.

ஆனால், அதில் எத்தனை ஆய்வுகள் செயல்பாடுக்கு வந்துள்ளன என்பது கேள்வி குறியாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இங்கு மேற்கொள்ளப்பட்ட பழமையான ஆய்வுகளை பற்றிய தரவுகளை சேகரித்து, மலை பாதையில் உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கண்டுகொள்ளுமா அரசு?


நீலகிரி ஆவண மைய இயக்குனர் தர்மலிங்கம் வேணுகோபால் கூறுகையில்,‘‘நீலகிரியில் நிலச்சரிவு பேரிடர் மதிப்பீட்டுக்காக நடந்த கடந்த கால விரிவான ஆய்வில், நேரடி மற்றும் மறைமுக ஆபத்து மற்றும் மழை பொழிவின் வரம்பு ஆகியவை குறித்த வல்லுநர்களின் ஆராய்ச்சிகள் மற்றும் முக்கிய எச்சரிக்கைகள் குறித்த அறிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் கண்டுகொள்வதில்லை.
குறிப்பாக, நிபுணர்களின் ஆய்வுகள்; மற்றும் பரிந்துரைகளை பின்பற்றி, மாநில அரசு நடவடிக்கை எடுத்திருந்ததால் இப்பகுதியில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை தவிர்த்திருக்கலாம். தற்போதுதாவது, இங்கு நடந்து வரும் நிலச்சரிவு ஆய்வுகளின் பரிந்துரைகளை ஆராய்ந்து, உள்ளூர் மக்களின் ஆலோசனைகளையும் பெற்று, மலை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us