/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 09, 2025 06:14 AM

ஊட்டி: மத்திய அரசு தொழிலாளர் சட்டங்கள் நான்கு தொகுப்புகளாக சுருக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊட்டி ஏ.டி.சி., திடல், சி.பி.ஐ.எம்., மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில், மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, தொழிலாளர் சட்டங்கள் நான்கு தொகுப்புகளாக சுருக்கியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.பி.ஐ.எம்., மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன், சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் போஜராஜ், வி.சி.க., மண்டல செயலாளர் சுசி கலையரசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் மாவட்ட பொருளாளர் புவனேஷ், சி.பி.ஐ.எம்., ஊட்டி தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிட தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் அர்ஜுணன், சி.பி.ஐ.எம்., வினோத் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

