/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் வாகனங்களால் தொடரும் போக்குவரத்து நெரிசல்
/
தனியார் வாகனங்களால் தொடரும் போக்குவரத்து நெரிசல்
தனியார் வாகனங்களால் தொடரும் போக்குவரத்து நெரிசல்
தனியார் வாகனங்களால் தொடரும் போக்குவரத்து நெரிசல்
ADDED : டிச 10, 2025 08:13 AM
கூடலுார்: கூடலுார் தேவர்சோலை சாலையை உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி, கேரளா மாநிலம் வயநாடு, கண்ணனுார் உள்ளிட்ட பகுதிகளின் வாகனங்களும் பயன்படுத்தி வருகின்றன.
இங்குள்ள தேவர்சோலை பகுதியில், பேரூராட்சி அலு வலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் உள்ளது.
குறுகிய சாலை கொண்ட நகரில், சில தனியார் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு, பொருட்களை இறக்கி ஏற்றி செல்கின்றனர். இதனால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தொடரும் வாகன போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பயணிகள் கூறுகையில், 'தேவர்சோலை பகுதியில், சில தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.

