/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்பு பகுதியில் காட்டெருமை உலா
/
குடியிருப்பு பகுதியில் காட்டெருமை உலா
ADDED : டிச 10, 2025 08:14 AM

கூடலுார்: கூடலுார் தேவர்சோலை அருகே, காட்டு யானைகளை தொடர்ந்து, காட்டெருமை உலா வர துவங்கியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார் பகுதியில், வனத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்கு உணவு, குடிநீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன.
இவைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி, மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க நிரந்தர நடவடிக்கை இல்லை. இந்நிலையில், தற்போது, காட்டெருமைகளும் குடியிருப்பு பகுதிக்கு வர துவங்கியுள்ளது.
தேவர்சோலை 'திரிடிவிஷன்' குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டெருமை, மக்களை அச்சுறுத்தின. அப்பகுதியினர் சப்தமிட்டு விரட்டினர். வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கூறுகையில், 'குடியிருப்பு பகுதிக்குள் இரவில் உலா வரும் காட்டு யானைகள், புலி, சிறுத்தைகளால் மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். இவைகளை தொடர்ந்து காட்டெருமையும் குடியிருப்பு பகுதிக்கு வர துவங்கி இருப்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறை உரிய நடவடிக்கை வேண்டும்,' என்றனர்.

