/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
டூவீலர் மீது பஸ் மோதி இன்ஜி., பலி: வெளிநாட்டில் இருந்து வந்த நாளில் சோகம்

ADDED : நவ 02, 2025 10:46 PM

பந்தலுார்:  வெளிநாட்டில் இருந்து வந்த முதல் நாளில், பஸ் மோதி இன்ஜினியர் உயிரிழந்தார்.
பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் 33; துபாயில் தனியார் கம்பெனியில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.  நேற்று முன் தினம் இவர் விடுமுறையில் சொந்த ஊர் திரும்பினார்.
வீட்டிற்கு சென்ற இவர் இரவு 9 மணிக்கு, ஸ்கூட்டியில் கடைக்கு சென்று திரும்பி உள்ளார். அப்போது பஜார் பகுதியில் வந்த கேரளா அரசு பஸ், ஸ்கூட்டி மீது மோதியது.
அதில் பலத்த காயமடைந்த பிரின்ஸ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி போலீசார், பஸ்சை பறிமுதல் செய்து அரசு பஸ் டிரைவர் பிரதீப் 50, கண்டக்டர் ஸ்ரீலதா ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். மேலும் விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் பிரதீப் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டார்.
பிரின்ஸ் உடல் பிரேத பரிசோதனைக்கு பின், குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு திரும்பிய தினமே, விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சேரம்பாடி பகுதியில் சோகத்தை ஏற் படுத்தியது.