/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரேலியா அணை காவலர் அறையில் விழுந்த மரம்
/
ரேலியா அணை காவலர் அறையில் விழுந்த மரம்
ADDED : ஜூன் 01, 2025 10:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:
குன்னுார் ரேலியோ அணை பகுதியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காவலர் தங்கும் ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது.
குன்னூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழையும் பெய்து வரும் நிலையில், இரவு கற்பூர மரம் இந்த கட்டடத்தின் மீது விழுந்தது. இதில் கூரைகளின் ஒரு பகுதி சேதமானது.
இவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மிகவும் பழமை வாய்ந்த பாரம்பரிய கட்டடம், தற்போதும் சிறப்பாக உள்ளதால், சீரமைத்து பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.