தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/‘பழங்குடியினர் தீபாவளி கொண்டாட்டம்’

‘பழங்குடியினர் தீபாவளி கொண்டாட்டம்’

‘பழங்குடியினர் தீபாவளி கொண்டாட்டம்’


UPDATED : நவ 08, 2026 04:47 PM

ADDED : நவ 08, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 04:47 PM ADDED : நவ 08, 2026 04:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலூர்: கூடலூர், முதுகுழி, முண்டகுன்னு, கோழிகண்டி பழங்குடி மக்கள், தீபாவளியை சிறப்பாக கொண்டாட ரோட்டரி கிளப் சார்பில் புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன.

கூடலூர் புளியாம்பாறை அருகே உள்ள முண்டகுன்னு, கோழிகண்டி, முதுமலை புலிகள் காப்பகம் முதுகுழி கிராம பழங்குடியினர் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில், முதுமலை ரோட்டரி கிளப் சார்பில், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருக்கும் புத்தாடைகள், இனிப்பு வழங்கப்பட்டது.

முதுகுழியில், நேற்று முன்தினம், நடந்த நிகழ்ச்சிக்கு, தலைவர் ராபர்ட் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். கூடலூர் ஆர்.டி.ஓ., குணசேகரன் பழங்குடியினருக்கு தீபாவளிக்கான புத்தாடைகள், இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், செயலாளர் சினேஷ், பொருளாளர் ஸ்ரீனு துணைத் தலைவர் ஆனந்த், கூடலூர் அரசு கல்லூரி உதவி பேராசிரியர் மகேஷ், தேவாலா பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us